Publish Date: Mon, 12 Jan 2009 (14:06 IST)
Updated Date: Mon, 12 Jan 2009 (14:05 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து இன்று விலகினார் சிபுசோரன்.
சுமார் நான்கரை மாதம் முதல்வர் பதவி வகித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான சிபுசோரன், தனது பதவி விலகல் கடிதத்தை மாநில் ஆளுநரிடம் அளித்தார்.
இதையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அரசை அமைக்கும் என்று தெரிகிறது.
தமர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், முதல்வர் பதவியில் இருந்து சிபுசோரன் விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த நெருக்குதல்களைத் தொடர்ந்து அவர் பதவி விலக முடிவு செய்தார்.