Publish Date: Fri, 09 Jan 2009 (16:22 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (16:22 IST)
அகில இந்திய மோட்டார் வாகன சங்கச் செயலர் ரமேஷ் குலாமி இன்று அத்தியாவசியப் பொருட்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (எஸ்மா) கைது செய்யப்பட்டுள்ளார்.
டீசல் விலையை குறைக்க கோரியும், நுழைவு வரியை குறைக்க கோரியும், சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், நாடு முழுவதும் கடந்த 5 நாட்களாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நமது நாடு முழுவதும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய மோட்டார் வாகன சங்க செயலர் ரமேஷ் குலாமி இன்று எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் தனது வீட்டில் இருந்தபோது காவலர்கள் அவரை கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.