உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்த மத்திய மருந்துப் பொருட்கள் ஆணையம் விரைவில் துவக்கப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
சென்னையில் அயல்நாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டின் ஒருபகுதியாக அனைவருக்கும் சுகாதாரத்தில் அயல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் பேசிய அவர், மத்திய மருந்து பொருட்கள் ஆணையம் விரைவில் துவக்கப்படும் என்றார்.
ஆண்டுதோறும் மருந்து பொருட்களின் உற்பத்தி 15 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய மருத்துவ குழு சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் நாடு முழுவதிலும் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.