Publish Date: Fri, 09 Jan 2009 (14:09 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (14:08 IST)
சென்னை : சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், மாலையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் கல்ந்து கொண்டு பேசுகிறார்.
இந்த மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தொடக்கவுரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின் குடியரசுத் தலைவர் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
Webdunia
Publish Date: Fri, 09 Jan 2009 (14:09 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (14:08 IST)