Publish Date: Fri, 09 Jan 2009 (14:08 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (13:09 IST)
நந்திகிராம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின் வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டன.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஃபிரோசா பீபி தனக்கு எதிராகப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பரமானந்த பாரதியை விட 39,551 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்று மாவட்ட நீதிபதி சி.டி. லாமா தெரிவித்தார்.
முன்னதாக ஜனவரி 5 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Fri, 09 Jan 2009 (14:08 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (13:09 IST)