உலகளாவிய பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதால், அயல்நாடுவாழ் இந்தியர்களை இந்தியாவில் முதலீடு செய்ய, அயல்நாடுவாழ் இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி அழைப்பு விடுத்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவை தீர்க்கப்படும் உடனுக்குடன் என்றார்.
சென்னையில் அயல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டின் முதல் நாளன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் பிரதமர் அறிவித்த திட்டங்கள் பயனுள்ள வகையில் அமையும் என்று கூறினார்.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொடர்ந்து நமது நாடு நீடித்து வருகிறது என்றும், உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நாடாக அது திகழ்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.