ஸ்ரீநகரில் ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீடு அருகில் நடமாடிய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இராணுவத்தினர் சுட்டதில் பலியானார்.
ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் ஜம்மு- காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா வீடு உள்ளது. பலத்த பாதுகாப்பு மிழுந்த அந்தச் சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவரை நிற்குமா இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
எச்சரிக்கையையும் மீறி அந்த நபர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதால், அவரைத் தீவிரவாதி என்று நினைத்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதி அல்ல என்றும், அப்துல் ரஷீத் என்றழைக்கப்படும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.