தலைநகர் புதுடெல்லியில் இன்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று ஒருநாள் பனிமூட்டம் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் துவங்கியுள்ளது தலைநகர மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி விமானநிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய 15 உள்நாடு, அயல்நாடு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாகவும், 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் முதல் தலைநகரில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமானப் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.