வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 190 வாக்குச் சாவடிகளில் 130 வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் துணையுடன் போலியான வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வர ஆளும் தி.மு.க முயற்சிப்பதாக, அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா, ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை நிராகரித்த தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் மூலம் 100 விழுக்காடு முழுமையான வாக்குப்பதிவு சாத்தியமாகும் என்று கூறியதுடன், செயல் விளக்கத்தையும் நேரில் காண்பித்தார்.