Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை

Advertiesment
காஷ்மீரில் 5வது நாளாக துப்பாக்கிச் சண்டை
, திங்கள், 5 ஜனவரி 2009 (12:41 IST)
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5வது நாளாக இன்றும் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.

பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் பகுதியில் ஜெய்ஷ்-ஈ-முகமது மற்றும் லஷ்கர்-ஈ-தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவம் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கியது.

மெந்தார் பகுதியிலுள்ள படி-டார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கியதால், படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இன்று 5வது நாளாக தொடர்ந்து சண்டை நீடிக்கிறது. இச்சண்டையில் இதுவரை 4 தீவிரவாதிகள் மற்றும் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உயர் ராணுவ அதிகாரிகளும், காவல்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil