நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என்று விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமிர்பூரில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாம், பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதற்கு மூன்று ஆலோசனைகளை வழங்கினார்.
"முதலில் நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்புடன் மிகப்பெரிய பிரச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்த வேண்டும்.
இரண்டாவதாக, நமது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பயங்கரவாதம் தொடர்பான எல்லா வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்"என்றார் கலாம்.