Publish Date: Sat, 03 Jan 2009 (12:40 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (12:39 IST)
ஜம்மு அருகில் சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து ஊடுருவ முயன்ற நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஆர்.எஸ்.புரம் பிரிவில் சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை நமது எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கொல்லப்பட்ட நபரின் விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.