Publish Date: Fri, 02 Jan 2009 (15:28 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (15:28 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் இளநிலை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மெந்தார் என்ற நகரத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியுள்ள ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று முதல் மோதல் நடந்து வருகிறது.
இதில், இதுவரை இளநிலை அதிகாரி ராகேஷ் குமார், நாய்க் கோபால் ஆகிய இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
படையினருடன் மோதும் குழுவில் 6 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்கள் வனத்திற்குள் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்துப் படைத்தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
Webdunia
Publish Date: Fri, 02 Jan 2009 (15:28 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (15:28 IST)