மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சக்திகளுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் எத்தனை கொடுத்தாலும், அவை அனைத்தையும் அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருவத நல்லதல்ல என்று இந்தியா எச்சரித்துள்ளது.
இதுகுறித்துச் சண்டிகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா, "நாம் போதுமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அயல்நாடுகளின் புலனாய்வு அமைப்புக்களும் ஆதாரங்களைத் தந்துள்ளன.
ஆனால் அவற்றை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவது கவலைக்குரிய விடயமாகும். சர்வதேசச் சமூகத்தின் ஒழுங்கிற்கு அமையச் செயல்படப் பாகிஸ்தான் மறுப்பது அந்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்திற்கும் நல்லதல்ல" என்று கூறினார்.