கடந்த மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்துள்ளது.
புது டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, பயங்கரவாதத்தை முறியடிக்க தேசப் புலனாய்வு முகமை ஒன்றை அமைக்க வகை செய்யும் சட்டவரைவிற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் தந்துள்ளதை அடுத்து, அந்தச் சட்டவரைவு சட்டமாகி விட்டது என்று தெரிவித்த அவர், தேசப் புலனாய்வு முகமை வியாழக்கிழமை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்கள் விரைவில்...