தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பயணம் எப்போது என்பது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரணாப், "இலங்கைத் தீவின் இனப் பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாகாணங்களில் தேர்தல் நடப்பதால் அது நடைமுறைக்கு வரவில்லை. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு காண இயலாது. 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியா- சிறிலங்கா ஒப்பந்தத்தின் படிதான் தீர்வு காண முடியும். இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை" என்றார் பிரணாப் முகர்ஜி.