Publish Date: Tue, 30 Dec 2008 (12:09 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (12:07 IST)
தலைநகர் டெல்லியில் 2வது நாளாக இன்றும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி விமானநிலையத்தில் இருந்து அயல்நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்லும் 6 விமானங்கள் உட்பட 18 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஜெய்ப்பூர், பெங்களூரு, ஸ்ரீநகர், புவனேஸ்வர், ஹைதராபாத், மும்பை, லெஹ் ஆகிய நகரங்களுக்கு டெல்லியில் இருந்து புறப்படும் 9 அதிகாலை நேர விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்றும் பனிமூட்டம் காணப்பட்டதால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரயில், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பனிமூட்டம் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Tue, 30 Dec 2008 (12:09 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (12:07 IST)