மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள 10 பேர் ஜனவரி 6 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 10 பேரை ஜனவரி 6 வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்ட (MCOCA) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு உள்ளவர்களில் ஒருவரும், அபினவ் பாரத் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான சமீர் குல்கர்னியை நீதிமன்றக் காவலில் இருந்து மத்தியப் பிரதேசக் காவல்துறையின் காவலிற்கு மாற்ற நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் அமீர் குல்கர்னியைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜபல்பூர் காவல்துறையினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.