Newsworld News National 0812 29 1081229016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் கடும் பனி: விமானப் போக்குவரத்து பாதிப்பு

Advertiesment
கடும் பனி விமானப் போக்குவரத்து புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் ஜெட் ஏர்வேஸ்
தலைநகர் டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பனி மூட்டம் காரணமாக 4 சர்வதேச விமானங்கள் உட்பட 35 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாகவும், பிற நகரங்களில் இருந்து டெல்லி வர வேண்டிய 3 விமானங்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 2 விமானங்களும், கோ-ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பனிமூட்டம் காரணமாக சாலை, ரயில் போக்குவரத்தும் டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil