பெங்களூரு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பாதுகாப்பு பணியில் 9,500 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் பாலசந்திர ஜரகிஹோலி, ஆனந்த் அஸ்நோதிகர், சிவானகௌடா நாய்க், உமேஷ் காட்டி, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா ஆகியோர் உட்பட 73 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஹுக்கேரி, அரப்பவி, தேவதுர்கா, கார்வர், துருவிகேரி, மதுகிரி, டோடபல்லப்பூர், மட்டூர் ஆகிய 8 தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கி பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 30ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.