திருப்பதி - திருத்தணி- சென்னை வரையிலான நான்கு வழிச்சாலைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது
தேசிய நெடுஞ்சாலை திட்டம் பகுதி 3-ன் கீழ் நான்கு மற்றும் ஆறு வழிச்சாலை அமைக்க மூன்று துணைத் திட்டங்களை உருவாக்கி இயக்கி ஒப்படைக்கும் அடிப்படையிலும் மற்றும் வடிவமைத்து, உருவாக்கி, நிதி முதலீடு செய்து, இயக்கி, ஒப்படைக்கும் அடிப்படையிலும் மூன்று துணைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டங்கள் பற்றிய விவரம் :
1. ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை எண் 8இல் கிஷன்கர் - பிவார் வரை ரூ.727.38 கோடி செலவில் ஆறு வழிச்சாலை.
2. கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை எண் 11இல் குண்டபூர் - சூரத்கல் மற்றும் கர்நாடகா - கேரளா எல்லைப் பகுதியில் மங்களூர் வரை ரூ.891 கோடி செலவில் 90.08 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழிச்சாலை.
3. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 205இல் திருப்பதி - திருத்தணி -சென்னை வரை நான்கு வழிச்சாலை.
திருப்பதி- திருத்தணி - சென்னை (என்.எச்.205) வரையிலான 124.6 கி.மீ. நீளச் சாலை ரூ.922.60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
இதில், நில கையகப்படுத்துதல், மறுசீரமைப்பு, புனரமைப்பு மற்றும் முன்கட்டுமானப் பணிகளுக்கு ரூ.120.60 கோடியும் அடங்கும்.