ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருந்த ஒரு பதுங்கு குழியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள தனோவா காட்டுப்பகுதியில் பதுங்கு குழி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சோதனை நடத்திய போது ஆயுதங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஏ.கே. ரக துப்பாக்கி, ஒரு டெட்டனேட்டர், ஒரு வயர்லஸ் கருவி, 4 கையெறி குண்டுகள், 150 தோட்டாக்கள் ஆகியவை அந்த பதுங்கு குழியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுதங்களை பறிமுதல் செய்த பின்னர் பதுங்கு குழியை காவல்துறையினர் அழித்து விட்டனர்.