Publish Date: Thu, 25 Dec 2008 (17:29 IST)
Updated Date: Thu, 25 Dec 2008 (17:29 IST)
சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 5.55 மணியளவில் 4.4 ரிக்டர் அளவு பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் கேங்டோக் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
பொது மக்கள் தங்களின் வீடுகளை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்ததால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
Webdunia
Publish Date: Thu, 25 Dec 2008 (17:29 IST)
Updated Date: Thu, 25 Dec 2008 (17:29 IST)