Publish Date: Wed, 24 Dec 2008 (16:21 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (16:20 IST)
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 100 பெட்டி தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பன்சி லால் அன்ட் சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த டேட்டா ஏஜென்சி என்ற நிறுவனத்திற்கு சக்கன்- டா- பாக் எல்லை வழியாக 100 பெட்டிகள் தக்காளி கொண்டு செல்லப்பட்டது என்று எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டேட்டா ஏஜென்சி உரிமையாளர் முகமது அக்பர் என்பவரின் கோரிக்கை அடிப்படையில் இந்தத் தக்காளிகள் கிலோ ரூ.8.50 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Webdunia
Publish Date: Wed, 24 Dec 2008 (16:21 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (16:20 IST)