ஜம்மு- காஷ்மீரில் தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.
சாலை ஓரத்தில் தகர டப்பாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டு, எல்லையோர மாவட்டமான ராஜூரியில் லுய்டார்மன் என்ற இடத்தில் வழக்கமான சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படை பேச்சாளர் எஸ்.என். ஆச்சார்யா தெரிவித்தார்.
வெடிகுண்டு தவிர சீன கையெறி குண்டு, 23 சுற்று ஏ.கே. துப்பாக்கி குண்டுகள் ஆகிய வெடிபொருட்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார் என்று யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.