வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. பயிற்சியும், ஆயுத உதவியும் செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி, வடகிழக்கு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகள் தொடர்பாக அடுத்தடுத்துத் தகவல்களை மத்திய அரசு பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
"வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் நிழலுலக, தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதையும், ஆயுத உதவிகள், பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் தீவிரவாதக் குழுக்களை ஊக்குவித்து வருகிறது என்பதையும் அடுத்தடுத்து வரும் தகவல்கள் காட்டுகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.