இந்து பயங்கரவாதிகள் உருவாவதைத் தான் வரவேற்பதாக சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சிவசேனா கட்சிப் பத்திரிகையான 'சமானா'விற்கு அளித்துள்ள பேட்டியில், 'செப்டம்பர் 29இல் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இந்து பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்துக்களில் பயங்கரவாதிகள் நிச்சயமாகப் பிறக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங், லெப்டினன்ட் கர்னல் புரோஹித் செய்த தவறு என்ன? உணர்வுகளால் தூண்டப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்றார் அவர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்துப் பேசிய தாக்கரே, "இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சுத்தமானவர்கள். அவர்கள் ஒழுக்கத்தின் சின்னம். ஆனால் எல்லைப் பகுதிகளிர் ஊழல் நிறைந்துள்ளது. வங்காள தேச முஸ்லிம்கள் எப்படி எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் வர முடியும்? எல்லையில் என்னதான் நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.