Publish Date: Tue, 23 Dec 2008 (18:03 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (18:03 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்ட மராட்டிய மாநில காவல் அதிகாரி ஹேமந்த் கார்க்கரே கொலையில் சதி இருப்பதாக அமைச்சர் ஏ.ஆர். அந்துலே எழுப்பிய சந்தேகங்களை மத்திய அரசு நிராகரித்தது.
இதுகுறித்து மக்களவையில் இன்று, அந்துலே பதவிவிலக வேண்டும் என்று கோரிய பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையில் விளக்கமளித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின்போது கார்கரே உள்ளிட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியிடப்படும் வெவ்வேறு கருத்துக்களில் உண்மை இல்லை. இது மிகுந்த வருத்தத்திற்கு உரியது" என்றார்.
மும்பையில் நவம்பர் 26 அன்று நடந்த சம்பவங்களை வரிசைப்படுத்திப் பட்டியலிட்ட சிதம்பரம், "கார்கரேவும் மற்ற இரண்டு அதிகாரிகளும் கொல்லப்பட்டதில் எந்தச் சதியும் இல்லை என்ற முடிவிற்கு விசாரணை அதிகாரிகள் வந்துள்ளனர்" என்றார்.