Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயில்வே வருவாய் 14.49 ‌விழு‌க்காடு அதிகரிப்பு

ரயில்வே வருவாய் 14.49 ‌விழு‌க்காடு அதிகரிப்பு
, திங்கள், 22 டிசம்பர் 2008 (17:12 IST)
நட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான கால‌த்‌தி‌ல் ரயில்வேத் துறையின் வருவாய் ரூ. 50,931.98 கோடியை எட்டியுள்ளது. கட‌ந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.44,484.60 கோடியைவிட இது 14.49 ‌விழு‌க்காடு கூடுதலாகும்.

இதே காலகட்டத்தில், சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.34,393.78 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.29,733.82 கோடி மட்டுமே. சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15.67 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்திலரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.14,440.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.12,869.41 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டைவிட 12.21 ‌விழு‌க்காடு அதிகமாகும்.

ஏ‌‌‌ப்ர‌ல் முத‌ல் நவ‌ம்ப‌ர் 30ஆ‌ம் தே‌தி வரை‌யிலான கால‌த்‌தி‌ல், 4,717.37 மில்லியன் பே‌ர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை‌யி‌ல் பயணிகளின் எண்ணிக்கை 6.47 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது. இ‌த்தகவலை ம‌த்‌திய ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil