Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்துலே பிரச்சனை: மாநிலங்களவையில் அமளி, தள்ளிவைப்பு

Advertiesment
அந்துலே பிரச்சனை: மாநிலங்களவையில் அமளி, தள்ளிவைப்பு
, திங்கள், 22 டிசம்பர் 2008 (13:55 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது அம்மாநில மூத்த காவல் அதிகாரிகள் உயிரிழந்தது குறித்து சந்தேகம் எழுப்பிய மத்திய அமைச்சர் அப்துல் ரஹ்மான் அந்துலே பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மாநிலங்களவை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், மறைந்த உறுப்பினர் டி.ஜி. தேஷ்முக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வு முடிந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்துலே பதவி விலக வேண்டும் என்று கூறி தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதன் காரணமாக அவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் மொஹம்மது ஹமித் அன்சாரி அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil