Publish Date: Sun, 21 Dec 2008 (16:55 IST)
Updated Date: Sun, 21 Dec 2008 (16:54 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியானார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள உல்லட்டி மேலூரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (25). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.
காஷ்மீரில் பணியாற்றி வந்த மஞ்சுநாத், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து ராணுவ வீரர்களுடன் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு தீவிரவாதிகளும் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மஞ்சுநாத் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் இன்று கோவை கொண்டுவரப்பட்டது.
பின்னர் சொந்த ஊரான உல்லட்டி மேலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உடலுக்கு அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீல், ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பின்னர் மஞ்சுநாத் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.