கிழக்கு டெல்லியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. தொழிலாளர் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
கிழக்கு டெல்லியில் ஜகத் புரி பகுதியில் உள்ள நெரிசலான இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 4 மாடிக் கட்டடம் இன்று காலை 11.40 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.