குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கும் நோக்கத்துடன் 'ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கும் முறை ஒன்று நிறுவப்படும். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தை பாதுகாப்பு கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அவைகளிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
எனினும், இந்தத் திட்டத்திற்கு இன்னும் உரிய ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.