Publish Date: Tue, 16 Dec 2008 (11:01 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சுமுகமாக இருக்க வேண்டுமென்றால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதுடெல்லியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்த அமைச்சர் அந்தோணி, இந்தியா ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அதற்காக பாகிஸ்தான் மீது போர் தொடுப்பீர்களா என்று கேட்காதீர்கள் என்றார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நடவடிக்கைகள் இயல்பாக உள்ளது என்றும் கூறினார்.