தலைநகர் டெல்லியில் 3ஆவது நாளாக இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ்-க்கும் குறைவாக நீடித்து வருகிறது. இதனால் கடுமையான குளிர் வாட்டுகிறது.
இன்று அதிகாலையில் டெல்லியில் 8.5 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. ஞாயிறன்று அதிகாலையில் 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் குளிர்காலத்தில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக சனிக்கிழமையன்று 6.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் அந்த மையம் கூறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், வட-மேற்குப் பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலையால், டெல்லியில் சராசரியாக 14 டிகிரி செல்சியஸ் அளவுக்கு நீடித்ததாகவும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியைப் பொருத்தவரை நாளை காலை வரை 9 டிகிரி செல்சியல் அளவை ஒட்டியே வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.