ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்
, சனி, 13 டிசம்பர் 2008 (10:54 IST)
ராஜஸ்தானின் முதலமைச்சராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றார். ஆளுநர் எஸ்.கே.சிங் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
கடந்த 1998 முதல் 2003 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்த கெலாட், தற்போது 2ஆம் முறையாக மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் மட்டுமே பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெறும் மற்ற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்தை முன்னின்று நடத்திய அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து அவருக்கு செல்வாக்கு இருப்பதால், ராஜஸ்தான் முதல்வர் தேர்வின் போது தனது எதிர்ப்பாளர்களின் முயற்சியையும் தாண்டி ராஜஸ்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.