ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 5ஆவது கட்டமாக 11 தொகுதிகளில் நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 8 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினைச் செலுத்தவுள்ள இந்த 11 தொகுதிகளிலும், 2 எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 179 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆயிரத்து 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருசில சிறிய அளவிலான எதிர்ப்புகளைத் தவிர்த்து, 5ஆவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அமைதியாக முடிந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி உட்பட 5 பெண் வேட்பாளர்களும் நாளைய தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.