Publish Date: Fri, 12 Dec 2008 (13:26 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (13:26 IST)
மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகானும், சட்டீஸ்கர் முதல்வராக ராமன் சிங்கும் இன்று பதவியேற்கிறார்கள்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ராஜஸ்தானில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
சட்டீஸ்கர் மாநில முதல்வராக ராமன் சிங் பதவியேற்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பல்ராம் ஜாக்கர், பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, வெங்கையா நாயுடு, அனந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
மத்தியப் பிரதேச வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தொடர்ந்து 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பது முதல்முறையாகும்.
Webdunia
Publish Date: Fri, 12 Dec 2008 (13:26 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (13:26 IST)