Publish Date: Thu, 11 Dec 2008 (20:01 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மிசோரம் முதல்வராக அம்மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் லால் தன்ஹாவ்லா இன்று பதவியேற்றார்.
அவருடன் ஆர். லால்ஜிர்லியானா, எச். லியான்சைலோவா ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
நான்கு முறை முதல்வர் பதவியேற்றுள்ள ஒரே வடகிழக்கு மாநில அரசியல் தலைவர் லால் தன்ஹாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 66 வயதாகும் இவர், முறையே 1984, 1989 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்து முடிந்த மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் மிசோ தேசிய முன்னணி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.