Publish Date: Thu, 11 Dec 2008 (18:37 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மத்திய புலனாய்வு கழகத்தில் (C.B.I.) அனுமதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 5,960 பணியிடங்களில், பல்வேறு பிரிவுகளில் 1,404 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் பிரிவில் 868 இடங்களும், சட்டப் பிரிவில் 74 இடங்களும், தொழில்நுட்ப பிரிவில் 105 இடங்களும், அமைச்சரக உதவியாளர்கள் பிரிவில் 326 இடங்களும், நான்காம் நிலை ஊழியர் பிரிவில் 19 இடங்களும், சிற்றூண்டி சாலை ஊழியர்கள் பிரிவில் 12 இடங்களும் காலியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Thu, 11 Dec 2008 (18:37 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)