Publish Date: Thu, 11 Dec 2008 (17:11 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ரயில்வேத் துறை 534.60 மில்லியன் டன் சரக்கினை ரயில்களில் எடுத்துச் சென்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தில் கையாளப்பட்ட சரக்கைவிட 32.41 மில்லியன் டன் கூடுதலாகும்.
நடப்பாண்டில் சரக்குப் போக்குவரத்து 6.45 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் ரயில்வேத் துறை 66.62 மில்லியன் டன் சரக்கினை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 65.77 மில்லியன் டன் ஆக இருந்தது.