பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாத்-உத்-தவா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட பிற அமைப்புகள் மீது தடை விதிக்கும் தீர்மானம் 1267 ஐ. நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய அயலுறவு இணை அமைச்சர் இ.அகமட் நியூயார்க்கில் வெளியிட்டுள்ள "பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்" என்ற தலைப்பிலான அறிக்கையில், "பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜமாத்-உத்-தவா என்கிற அமைப்பு பயங்கரவாத அமைப்பு, எனவே பாதுகாப்பு குழு தீர்மானம் 1267இன் படி அதனை தடை செய்யவேண்டும் என்று கோரியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் எங்கு இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படவேன்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.