நாடாளுமன்ற மழைக்கால தொடரின் 3ஆவது கட்ட கூட்டம் இன்று காலை தொடங்கியது.
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
வி.பி. சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மக்களவையில் அதன் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும், மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீர் அன்சாரியும் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மவுனம் அனுசரித்தனர். இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.