ராஜஸ்தானில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஷ்கரில் இழுபறி நீடிக்கிறது.
இதேபோல மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க. அதிக எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.
நண்பகல் 12.00 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வருமாறு:
டெல்லி (69)
காங்கிரஸ்- 34
பா.ஜ.க.- 29
பகுஜன் சமாஜ் கட்சி- 3
மற்றவை - 3
ராஜஸ்தான் (200)
காங்கிரஸ் - 91
பா.ஜ.க.- 77
பகுஜன் சமாஜ் கட்சி - 9
மற்றவை - 22
மத்திய பிரதேசம் (230)
காங்கிரஸ் - 69
பா.ஜ.க.- 122
பகுஜன் சமாஜ் கட்சி- 16
மற்றவை - 16
சட்டீஸ்கர் (90)
காங்கிரஸ்- 39
பா.ஜ.க.- 41
பகுஜன் சமாஜ் கட்சி- 3
மற்றவை - 3
மிசோரம் (40)
காங்கிரஸ்- 17
மிசோரம் தேசிய முன்னணி- 03
பா.ஜ.க.- 0
பகுஜன் சமாஜ் கட்சி- 0
மற்றவை - 0