ராஜஸ்தானில் ஆளும் கட்சியான பா.ஜ.க ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கிறது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.
காலை 10. 45 மணி நிலவரப்படி காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க 68 இடங்களில் முன்னிலையுடன் பின்தங்கி விட்டது.
ஆளும் கட்சியான பா.ஜ.க பின்னடைவுக்கு குஜ்ஜார் மக்கள் போராட்டமே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் 98 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. 80 இடங்களில் முன்னிலையுடன் பின்தங்கியுள்ளது.