மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏப்ரல் அல்லது மே மாத மத்தியில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்றும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே முன்கூட்டி தேர்தல் நடத்தப்படும் என்றார்.
அரசு பதவி காலம் முடிவடைவதற்கு சற்று முன்னர்தான் மக்களவைக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம் என்ற கோபால்சாமி, இதன்படி ஏப்ரல் மாத மத்தியில் இருந்து மே மாத மத்தியில் வரை தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்பு உள்ளது என்றும் உரிய நேரத்தில் தேர்தல் முறைப்படி நடத்தப்படும் என்றும் கூறினார்.
முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டாலும் தேர்தல் நடத்த எந்த சிரமமும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அதற்கு தயாராகவே இருக்கிறது என்றும் கோபால்சாமி தெரிவித்தார்.