ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டர்டுபோரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையை அடுத்து தீவிரவாதிகள் நேற்றிரவு ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கினர்.
இதையடுத்து அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டது.