தெற்கு டெல்லியில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் பொதுமக்கள் மத்தியில் பீதியும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
கோட்லா முபாரக்புர் பகுதியில் இன்று மாலை ஒரு மர்ம 'பை' கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று சந்தேகம் நிலவியது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில், அந்த பையில் துணிகள் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு நிலவி வந்த பீதியும், பரபரப்பும் அடங்கியது. பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.