இந்தியாவின் நிதித் தலைநகராகத் திகழும் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள விவரங்களை இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரிடம் அயலுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் அயலுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மும்பைத் தாக்குதல் தொடர்பான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத்த் தாக்குதல்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், மொஹம்மது அசார் ஆகியோரை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அயலுறவு அமைச்சக செய்திக் குறிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.