நமது நாட்டில் இதுவரை நடந்ததைவிட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களால் நிலைகுலைந்த நமது வர்த்தகத் தலைநகர் மும்பையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு இயல்வு நிலை திரும்பியுள்ளது.
பயங்கரவாதம் குறித்துத் தங்களின் வழக்கமான அறிக்கைகளை வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிட்டு வரும் அரசியல்வாதிகளின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் 59 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கடும் மோதலையடுத்து, மும்பை நகரம் பீதியின் பிடியிலிருந்து விடுபட்டிருந்தாலும், அந்த மோதல் விட்டுச்சென்றுள்ள கொடூர நினைவுகள் மும்பை மக்களின் மனதிலிருந்து அகழாது.
கடந்த நான்கு நாட்களாக மூடியிருந்த கல்வி நிலையங்களும், வர்த்தக நிறுவனங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்துடன் சாலைகளில் விரைவதைப் பார்க்க முடிந்தது.
வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்குவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நமது நாட்டின் முக்கியப் பங்கு வர்த்தக மையமாக மும்பை பங்குச் சந்தை (BSE) வழக்கம்போல சுறுசுறுப்புடன் இயங்கியது.
இதற்கிடையில், பயங்கரவாதம் குறித்துத் தங்களின் வழக்கமான அறிக்கைகளை வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிட்டு வரும் அரசியல்வாதிகளின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அத்தகைய அரசியல்வாதிகளின் பாதுகாப்பை முதலில் விலக்க வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர்.